யாழ்.பருத்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. கொழும்புக்கு சென்று திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்றைய தினம் 336 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் பருத்துறையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த நபர் தனது மாமாமியாரின் சிகிச்சைக்காக கொழும்பில் தங்கியிருந்து பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Radio