பூநகரி - இரணைதீவில் சிக்கியுள்ள 88 குடும்பங்களை மீட்பதற்கும், உடனடி உதவிகளை வழங்கவும் விமானப்படையின் உதவியை நாட தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I

“புரவி” புயர் அனர்த்தம் காரணமாக பூநகரி - இரணைதீவில் சிக்கியிருக்கும் 131 பேருக்கான உடனடி உதவிகள் வழங்குவதற்காக விமான படையினரின் உதவிகளை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் மழை மற்றும் காற்று என்பவற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றுபிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து 

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தருந்தார். குறித்த ஊடக சந்திப்பின்போது, கிளிநொச்சி மாவட்டத்திலே 455 குடும்பங்களை சேர்ந்த 1342பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தற்காலிக வீடு ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 

135 வீடுகள் பகுதி அளவிலே சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களிற்கான தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் தனித் தீவாக காணப்படுகின்ற 

இரணைதீவு பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும் மற்றும் தொழிலின் நிமித்தம் சென்று தங்கியிருப்போருமாக 88 குடும்பங்களை சேர்ந்த 131பேர் அங்கு இரு வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்களது தேவைகள் தொடர்பிலும் பிரதேச செயலாளரார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்கான உடனடி அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான கடல்வழி போக்குவரத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில் நிலமை நீடிக்குமாக இருந்தால் விமானப்படையினரின் உதவியை கோரி அதவர்கள் ஊடாக உடனடி அத்தியாவசிய பொருட்களை வழங்க கூடியதாக இருக்கும். 

என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான சூழலில் கொவிட் 19 தொற்று தொடர்பிலும் மக்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் 

இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், நீர்பாசன பொறியியலாளர்க், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Radio