"புரவி" பேரிடர் பகுதிகளில் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் முப்படைகள்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

"புரவி" புயல் பேரிடர் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கான சகல உதவிகளையும் வழங்க முப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள புரவி புயல் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாத்து, மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனர்த்தம் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபட தயாராகவுள்ளனர். 

Radio