இயக்கச்சி - பனிச்சங்கேணியில் பாதுகாப்பு பிரிவினர் மீட்டது என்ன..? தீவிர விசாரணைகள் தொடர்கிறது, ஊடகங்களுக்கு தகவல் வழங்க தொடர்ந்து மறுப்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - இயக்கச்சி பனிச்சங்கேணி பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்டு பாதுகாப்பு பிரினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் படங்கள் வெளியாகியுள்ளது. 

2014ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டில் வவுனியா வடக்கு காட்டுப்பகுதியில் 3 பேர் பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 

குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒருவருடைய தாயார் இருந்த வீட்டிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் சம்பவம் தொடர்பான பூரணமான தகவல்களை வெளியிட பாதுகாப்பு பிரிவு மறுத்துள்ளது. 

Radio