SuperTopAds

விளையாட்டு வினையானது!! -தொண்டையில் பலூன் சிக்கி சிறுவன் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II

பலூன் ஊதி விளையாடிய சிறுவனின் தொண்டையில், பலூன் உடைந்து சிக்கிக் கொண்டாதால் அச் சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகியுள்ளார். 

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்த வெற்றிலை வியாபாரியான சூரஜ் நாக் என்பவருக்கு தேவ்ராஜ் என்ற 4 அரை வயது மகன் உள்ளார். 

குறித்த மகள் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த தேவ்ராஜ் தனது சகோதரியுடன் பலூன் ஊதி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தேவ்ராஜ் வாயில் வைத்திருந்த பலூன் உடைந்து தொண்டைக்குள் சென்று சிக்கிக் கொண்டுள்ளது. 

சூரஜ் நாக் தனது மகனின் தொண்டையில் சிக்கிய பலூனை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதனால் தேவ்ராஜ்விற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அவனை அந்தேரியில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு முடியாமல் போனதால் நானாவதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவ்ராஜ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.