யாழ்.மாவட்டத்தின் தாழ்நில பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு..! போிடர் ஒன்றை எதிர்கொள்ள தயாராகுங்கள்..
யாழ்.மாவட்டத்தின் தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயரும்போது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருப்பின் அவர்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புமாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கேட்டுள்ளார்.
புரவி புயல் அபாயம் தொடர்பாக ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை தங்கவைப்பதற்கான இடங்களில் பிரதேசவாரியாக உள்ளன.
எனவே தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறும்போது முடிந்தளவு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்குங்கள். அதற்கு வசதியில்லாமல் பொது இடங்களில் தங்கும் நிலை ஏற்பட்டால் கொரோனா தொற்று தொடர்பில்
மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். என கேட்டிருக்கும் மாவட்ட செயலர் திடீர் மின்தடை, குடிநீர் தடை, வெள்ள அபாயம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
மேலும் அனர்த்தங்கள் தொடர்பில் 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்கவும். என மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.