கரையோர பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை..! மாவட்ட செயலர் தகவல்..

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மதியத்திற்கு முன்னர் புயலாக மாறும். என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி மாற்று இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட செயலர் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், 1978ம் ஆண்டுக்கு பின்னர் புயல் ஒன்று இலங்கை ஊடாக கரையை கடக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் குறிப்பாக கொக்கிளாய் பகுதியை அண்மித்து 

அது கடக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்களுடைய படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தரைப்பகுதிக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் நாளை இரவு தொடக்கம் கொக்கிளாய் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றி அருகில் உள்ள பாடசாலைகளில் தங்கவைக்க 

நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார். 

Radio