13 வயதான இரு சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கிய ஒரு காவாலி கைது, மேலும் பல காவாலிகள் வெளியே, பொலிஸார் உறக்கம்..! பெற்றோருக்கு கொலை அச்சுறுத்தல்..
முல்லைத்தீவு - முள்ளியவளை முறிப்பு பகுதியில் 13 வயதான இரு சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கிய காவாலி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த காவாலியுடன் மேலும் பல காவாலிகள் உள்ளதாக சிறுவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
கடந்த 28ம் திகதி 13 வயதான குறித்த சிறுவர்களை பிடித்த காவாலிகள் அவர்களுக்கு கட்டாயப்படுத்தி கசிப்பு பருக்கியிருக்கின்றனர். இந்நிலையில் சுய நினைவிழந்த நிலையில் சிறுவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,
காவாலிகள் குறித்து சிறுவர்களின் பெற்றோர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கசிப்பு பருக்கிய காவாலி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்நிலையில் சிறுவன் ஒருவனின் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தக் கள்ளச்சாராயத்தின் பின்னால் முறிப்பில் காடையர்கள், மரக்கடத்தல் கும்பல்கள், பாதாள உலக கோஸ்டிகள், வாள்வெட்டுக்காரர்களும் உள்ளனர். இதனால் ஊருக்கு செல்வதற்கு பயமாக உள்ளது. சொல்லியிருக்கிறார்கள் 'கவனமா இரு வெட்டுவன் கொத்துவன்' என,
எனக்கு பயமாக உள்ளது. எனது உயிருக்கும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் இந்த அரசாங்கமும், இந்த அதிகாரிகளும் உத்தரவாதம் தர வேண்டும் என்றார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தொகையில் அரைவாசிக்கு அதிகமாக இராணுவமும் பொலிஸாரும் உள்ள நிலையில்,
மாவீரர் தினம் மற்றும் நினைவேந்தல்கள் போன்ற தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க துடிக்கின்றனரே தவிர, தமது கடமைகளான சட்டவிரோத செயல்கள் மற்றும் இயற்கை அழிவுகளை தடுப்பதில் வேடிக்கை பார்ப்பதோடு அதற்கு துணைபோய்வருவதாக உறவினர்கள் குற்றம்சர்டியுள்ளனர்.
அண்மையில்கூட இதே முறிப்பு பகுதியில் அதிகாரிகளின் ஆதரவோடு இடம்பெற்றுவந்த சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர், சட்டவிரோத மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.
இதன்போதும் இந்த செயற்பாடுகளை தடை செய்யும் அரச இயந்திரங்களின் தவறுகள் சுட்டிக்காட்டிடப்பட்டிருந்தது.தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு பாரிய பிரச்சினையாக உள்ளபோதும் பொலிஸாருக்கும் கசிப்பு வியாபாரிகளுக்கும் உள்ள உறவுகள்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இந்நிலையில், முறிப்பு பகுதியில் இவ்வாறான ஒரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை ஒருவரை மாத்திரமே கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் மற்றும் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவம்
முறிப்பில் உள்ள இவ்வாறான குழுக்களுக்கு அரச இயந்திரங்களின பூரண ஆதரவு உண்டு என்பதனை நிரூபித்துள்ளது.இதேவேளை, பொலிஸாரின் விசாரணையில் கடந்த (28.11.2020) அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று முன்தினம் (29)
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், டிசம்பர் 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.