புதிய படத்திற்காக இணையும் பிக்பாஸ் பிரபலங்கள்!! -சாண்டி மாஸ்டர் ஹீரோவாகிறார்-

ஆசிரியர் - Editor II

விஜய் ரீவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.

குறித்த படத்தில் நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாண்டியுடன் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட சரவணன் மற்றும் ரேச்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்த சாண்டி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு