13 வயது சிறுமிக்கு திடீர் திருமண ஏற்பாடு!! -தடுத்து நிறுத்திய பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
13 வயது சிறுமிக்கு திடீர் திருமண ஏற்பாடு!! -தடுத்து நிறுத்திய பொலிஸ்-

ஜல்னா மாவட்டம் ஜாப்ராபாத் தாலுகா தம்பூர்ணி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு 28 வயதான இளைஞர் ஒருவரை திடீர் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது பெற்றோரின் முடிவால் வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய விரும்பம் இல்லாமல் சிறுவயதிலேயே தனக்கு திடீர் திருமணம் செய்து வைப்பதாக தொலைபேசி ஊடாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, அவர்களை எச்சரித்து சென்றனர்.

இருப்பினும் சில நாட்கள் கழித்து அந்த சிறுமியிடம் இருந்து பொலிஸாருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது கடந்த 27 ஆம் திகதி தனக்கு மற்றுமொரு ரகசிய திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தாள். 

இதையடுத்து குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறுமியின் பெற்றோரை பொலிஸார் எச்சரித்தனர். அதற்கு பணிந்து சிறுமிக்கு 18 வயது வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று பெற்றோர் வாக்குறுதி கொடுத்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு