தொழில் அதிபரை ரசியமாக மணந்த நடிகை!!
தமிழில் விஜய்யுடன் பைரவா, சர்கார், அஜித்குமாரின் விஸ்வாசம், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோச்.
அவர் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோச் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை அவர் கோச் வெளியிடவில்லை.