கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை..! பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..

ஆசிரியர் - Editor I
கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுதலை..! பல்வேறு தரப்பினருடன் பொலிஸாருடன் பேச்சு..

யாழ்.பல்கலைகழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவனை விடுதலை செய்யுமாறு யாழ்.பல்கலைகழக நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். 

இந்நிலையில் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் குறித்த மாணவனை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். குறிப்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா கோப்பாய் பொலிஸாருடன் பேசியிருக்கின்றார். 

இதன்போது பொலிஸ் சம்பிரதாயங்கள் நிறைவடைந்த பின்னர் மாணவனை விடுதலை செய்வதாக பொலிஸார் கூறியிருந்தார். இதேவேளை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மாணவனின் விடுதலை குறித்து பேசியுள்ளார். 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவாதம் வழங்கியிருந்ததாக கூறப்பட்டது. 

Radio