யாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பதற்றம்..! விஞ்ஞான பீட மாணவன் ஒருவன் சற்றுமுன்னர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய பல்கலைகழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

யாழ்.பல்கலைகழக வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மாணவர்கள் முயற்சித்த நிலையில் பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். 

இதனால் மாணவர்களுக்கும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்குமிடையில் தர்க்கம் உருவானது. குறிப்பாக தீபங்களை உங்கள் இருப்பிடங்களில் ஏற்றுமாறு 

பொலிஸாரும், இராணுவத்தினரும் வற்புறுத்தியதுடன் மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்திருந்தனர். 

இந்நிலையில் பல்கலைகழக வாயிலில் தீபம் ஏற்றிய யாழ்.பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்ற மாணவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Radio