பிக்பாஸில் இந்த வார எலிமினேட்!! யார் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
பிக்பாஸில் இந்த வார எலிமினேட்!! யார் தெரியுமா?

விஜய் ரீவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் இந்த வாரம் வெளியில் செல்லப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தினதி ஆரம்பமானது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.  

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஸ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் ஜித்தன் ரமேஸ் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Radio