விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ்-

ஆசிரியர் - Editor II
விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! -பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ்-

இளையதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் தைப் பொங்கல் விருந்தாக ஓ.டி.டி.யில் வெளிவரவுள்ளதாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், மாஸ்டர் படமும் வெளியாகவில்லை.

சமீபத்தில் திரையரங்குகள் அனைத்தையும் மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


Radio