மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாய்!! -இரும்பு குழாயால் அடித்துக் கொண்ற கொடூர மகன்-

ஆசிரியர் - Editor II
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாய்!! -இரும்பு குழாயால் அடித்துக் கொண்ற கொடூர மகன்-

மது அருந்துவதற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து, இரும்பு குழாயால் தாயை அடித்து கொலை செய்த கொடூர மகனை போலிஸார் கைது செய்தனர்.

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பெருமாள் கோவில் 2 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதியம்மாள் (வயது 65) என்பவரை கொலை செய்யத குற்றச்சாட்டில் அவரது மகனான மகேஸ்குமார் (வயது 38) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஆதியம்மாளுக்கு மகேஸ்குமார் (38), சதிஸ் (35) என 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாள் தனியாக வசித்து வந்தார். கீழே உள்ள வீட்டில் மகேஸ்குமார் (38) தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து நேற்று ஆதியம்மாள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மாடியில் உள்ள குடிசை வீட்டிற்கு சென்று பார்த்தனர். 

இதன் போது குறித்த வீட்டிற்குள் ஆதியம்மாள் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பில் உடனடியாக கோயம்பேடு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், கீழே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் மகேஸ்குமாரை கைது செய்த பொலிஸார் உடனடி விசாரணையை ஆரம்பித்தனர். அதில், அவர் பெற்ற தாயை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். 


Radio