கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்த சிறுவன் பரிதாப பலி!! -நண்பர்களுடன் மீன் பிடித்து விளையாடிய போது விபரீதம்-

ஆசிரியர் - Editor II
கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்த சிறுவன் பரிதாப பலி!! -நண்பர்களுடன் மீன் பிடித்து விளையாடிய போது விபரீதம்-

நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஒருவர் தவறுதலாக கழிவு நீர் கால்வாய்க்குள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொடுங்கையூர் அடுத்த சின்னண்டிமடம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் மழை வெள்ள நீர் ஓடிக் கொண்டிருந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று மதியம் மேற்குறித்த பகுதியில் சிறுவர்களுடன் சேர்ந்து முகேஸ் என்னும் 9 வயது சிறுன் மீன் பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தபோது, திடீரென கால்வாய் தண்ணீருக்குள் தவறி விழுந்துள்ளார். 

இதனால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை சக நண்பர்கள் மீட்க முடியாத நிலையில் கூச்சலிட்டனர். இதை அறிந்த அயலவர்கள் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் கிடைக்காத நிலையில் பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. சேகர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி நீச்சல் தெரிந்த வாலிபர்களை 5 பேரை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினார்.

இதன் போது சுமார் 300 அடி தூரத்தில் தண்ணீரில் மயங்கி கிடந்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் போலீசார் போலீஸ் வாகனம் மூலம், சென்னை ஸ்டான்லி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்தியர்களால் குறித்த சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


Radio