யாழ்.விடத்தல்பளைக்கு வந்த பேருந்து விபத்துக்குள்ளான இடத்திலிருந்த சுகாதார பணிப்பாளர், படையினர், மருத்துவர் உள்ளிட்ட சகலருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.விடத்தல்பளைக்கு வந்த பேருந்து விபத்துக்குள்ளான இடத்திலிருந்த சுகாதார பணிப்பாளர், படையினர், மருத்துவர் உள்ளிட்ட சகலருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவர்களை ஏற்றிவந்த பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானபோது அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் உள்ளிட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளுடன் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வந்த பேருந்தின் சாரதி துாங்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது. 

சம்பவத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில் அங்கு காயமடைந்தவர்களை துாக்கி சென்ற படையினர், மற்றும் பளை வைத்தியசாலையில் அவர்களை பார்வையிட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மருத்துவர், தாதியர்கள், சிற்றுாழியர்கள், 

காவலர், பொதுசுகாதார பரிசோதகர், ஊடகவியலாளர் ஆகியோரை இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. முன்னர் மருத்துவர் ஒருவர், தாதி ஒருவர், காவலாளி ஒருவர், சிற்றுாழியர்கள் 4 பேர், ஊடகவியலாளர் ஒருவர் என

8 பேரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்தில் பலர் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுகாதார பிரிவு இந்நடவடிக்கையினை எடுத்திருப்பதாக மாவட்ட செய்திகள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு