கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியவர் கைது..! புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீதும் பொலிஸ், இராணுவம் கெடுபிடி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியவர் கைது..! புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீதும் பொலிஸ், இராணுவம் கெடுபிடி..

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் மாவீரர்களுக்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி செய்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மாவீரர் நாளான இன்று பரந்தன் சந்தியில் ஈகை சுடரேற்றிய பொதுமகன் ஒருவர் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தியிருக்கின்றார். 

இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டதுடன், அஞ்சலி செலுத்திய பொதுமகன் கைது செய்யப்பட்டதுடன், 

ஈகை சுடர்களையும் பொலிஸார் பறித்து சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியால் வந்த ஊடகவியலாளர் ஒருவர் சம்பவத்தை புகைப்படம் பிடித்துள்ளார். 

இதனையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அவருடைய அடையாள அட்டை, தொலைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதுடன், 

தொலைபேசியில் இருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு நீண்ட நேரத்தின் பின்னர் தொலைபேசி மற்றும் அடையாள அட்டையை மீள வழங்கியுள்ளனர். 

Radio