பைக்கின் முன்சில்லை தூக்கி ஓடி ஸ்டண்ட் செய்யும் அஜித்!! -வைரலாகும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II

தமிழ் சினிமாவின் நடிகர் அஜித், வலிமை படத்திற்காக பைக் ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் நடிக்கும் 59 ஆவது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப் படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.

அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அஜித் முன்பக்க சில்லை உயர்த்தி பைக் ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Radio