வங்கக்கடலில் மற்றுமொரு தாழமுக்கம்!! -36மணி நேரத்தில் புயலாக மாறும் என்று எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II

வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படவுள்ளதாகவும், அது புயலாக மாற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி செல்லும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்றது.

இப்புயலால் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. எனினும் தற்போது வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னைக்கு பாதிப்பில்லை என கூறப்பட்டுள்ளது.


Radio