இலஞ்சம் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம்!!

ஆசிரியர் - Editor II

ஆசியா அளவில் இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பான் இலஞ்ச ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் உள்ளது.

ஊழல் கண்காணிப்பு அமைப்பு நடப்பாண்டில் ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை இந்தியர்கள் 2,000பேரிடம் நடத்திய ஆய்வில் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்தது.

இந்தியர்களில் 50சதவீதம் பேர், அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் இலஞ்சம் கொடுக்கப்பதாகவும், 32சதவீதம் பேர் சேவையை பெற இலஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியாவில் மக்களுக்கான பொதுச்சேவைகளை பெற 46சதவீதம் பேர் தரகர்களை அணுகி பயன் பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இலஞ்சத்தை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சி எடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும் அரசு-பொதுமக்கள் இடையே சுமூகமான உறவு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

17நாடுகளில் ஐந்து குடிமக்களில் ஒருவர் சுகாதார அல்லது கல்வி போன்ற, முக்கிய அரசு சேவைகளை அணுக இலஞ்சம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.

கணக்கெடுக்கப்பட்ட 17நாடுகளில் இந்தியாவுக்கு பிறகு அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலில் கம்போடியா 37சதவீதம் பேர் இலஞ்சம் கொடுப்பதாகவும், இந்தோனேசியாவில் 30சதவீதம் இலஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். குறைவாக இலஞ்சம் பெறும் நாடுகளாக ஜப்பான், மாலைதீவு ஆகியவை உள்ளன.


Radio