தேசிய தலைவர் பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கூட்டமைப்பு..!

ஆசிரியர் - Editor I

எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகளை இராணுவ நடவடிக்கைக்கு ஒத்ததாக இருக்கின்றன தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு 

வடக்கில் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. வடக்கு கிழக்கில் எமது மக்கள் தனித்துவமாக வாழவேண்டும் என்று கூறுகின்றோம்.

ஆனாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன 1970களில் நிறுவப்பட்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையும் ஆயுதப் போராட்டத்திற்கான காரணமாக அமைந்திருக்கலாம்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் மண்ணையும் இனத்தையும் பாதுகாப்பதற்காக தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது.

தலைவர் இல்லாத இந்தக் காலப்பகுதியில் எமது கிராமங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எங்களுடைய இனத்துக்காக போராடிய 

தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு