ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு தேர்வு!!

ஆசிரியர் - Editor II
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு தேர்வு!!

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக மதிக்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது உள்ளது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. 

இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக ஜல்லிக்கட்டு என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


Radio