நிவர் புயலால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை!! -இன்று முதல் வழமைக்கு-

ஆசிரியர் - Editor II
நிவர் புயலால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை!! -இன்று முதல் வழமைக்கு-

நிவர் புயல் தாக்கத்தால் இடைநிறுத்திவைக்கப்பட்ட சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘நிவர்’ புயல் நேற்று புதன்கிழமை கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

 இதன்படி இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தசூழலில் அதி தீவிர புயலாக இருந்த 'நிவர்', கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  

இந்நிலையில் சென்னையில் விமான சேவை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதற்படி தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது.  காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் விமானநிலையத்திற்கு வந்துள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு