ஜயப்பன் விதரகாலம் ஆரம்பம்!! -சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு-
சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயிலில் முற்பதிவு அடிப்படையில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை தரிசனம் தொடர்பாக திருவிதங்கூர் தேவஸ்தான தலைவர் கூறியதாவது, சபரிமலை கோயிலில் மண்டல காலத்தில் தினசரி ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் முற்பதிவு செய்துள்ள ஆயிரம் பேரில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களே சபரிமலைக்கு வருகின்றனர்.
எனவே கொரோனா கட்டுப்பாடு தடை உத்தரவுகளை பின்பற்றி தனி மனித இடைவெளியுடன் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை சபரிமலை தரிசனத்திற்கு தாராளமாக அனுமதிக்கலாம் என தெரிவித்தார்.