SuperTopAds

யாழ்.பருத்துறையிலிருந்து 162 கிலோ மீற்றர் துாரத்தில் மந்த கதியில் நகரும் “நிவர்”..!

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் “நிவர்” புயலானது இன்று அதிகாலை 5.45 மணியளவில் பருத்துறையிலிருந்து சுமார் 167 கிலோ மீற்றர் துாரத்தில் (புயலின் மையத்தின் வெளிப்பகுதி) கிழக்கு வடகிழக்கு திசையில் காணப்படுகின்றது. 

இது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எமக்கு நாளை வரை மழை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் கிடைக்கும். அவ்வப்போது கன மழை கிடைக்க வாய்பபுண்டு. 

நாளை அதிகாலை வரை காற்றும் பலத்த வேகத்தில் வீசும். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும். மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வழங்கியுள்ளார்.