யாழ்.நல்லுாரில் பெண் ஒருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நல்லுார் பகுதியில் பெண் ஒருவருக்கும், யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

நல்லுார் - கோவில் வீதியில் உள்ள 70 வயதான வயோதிப பெண்ணுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 11ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்ததுடன், கொழும்பிலிருந்து வந்ததை சுகாதார பிரிவுக்கு அறிவிக்கவில்லை. 

இதற்கிடையில் தனியார் வாகனம் ஒன்றில் குறித்த பெண் கிளிநொச்சிக்கும் சென்றுவந்துள்ளார். இந்நிலையில் 15ம் திகதியே சுகாதார பிரிவினர் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறினார். 

மேலும் காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய இரு சிப்பாய்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தொிவித்துள்ளார். 

Radio