கிளிநொச்சியில் முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு? திணறும் சுகாதார பிரிவு, போத்தல் தண்ணீர் விநியோகஸ்த்தர்கள் மீது பரிசோதனைக்கு தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாவட்டத்திற்குள் நுழைபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த இன்று காலை நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்போதே வெளிமாவட்டத்தில் மாவட்டத்திலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கிளிநொச்சியில் தொற்றுக்குள்ளான வயோதிபர் வேலை செய்யும் கடைக்கு வந்து செல்லும் போத்தல் தண்ணீர் விநியோகஸ்த்தர்கள் மீது சுகாதார பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளதுடன், விநியோகஸ்த்தர்கள் இருவரை தனிமைப்படுத்தி பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Radio