SuperTopAds

24 மணி நேரத்தில் 37,975 பேருக்கு தொற்று உறுதி!! -480 பேர் மரணம்-

ஆசிரியர் - Editor II

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 37 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமு் நாடு முழுவதும் 37 ஆயிரத்து 975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 இலட்சத்து 77 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 இலட்சத்து 38 ஆயிரத்து 667 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 314 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால், தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86 இலட்சத்து 4 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.