155ம் கட்டையில் ஒயில் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் முதியவருக்கே தொற்று..! சென்றுவந்த இடங்கள், பழகிய நபர்களை அடையாளம் காண துரித விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - 155ம் கட்டை பகுதியில் ஒயில் விற்பனை நிலையம் ஒன்றை நடாத்திவரும் சுமார் 72 வயதான தொண்டமான் நகரை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் சென்றுவந்த இடங்கள், பழகிய நபர்களை அடையாளம் காண்பதற்கான துரித விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது. 

மேலும் மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் மூடப்படுவதுடன், தொற்றுக்குள்ளான நபருடைய ஒயில் விற்பனை நிலையத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை மூடி

அங்குள்ளவர்களை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் குறித்த நபருடைய குடும்பத்தினர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு