யாழ்ப்பாணத்தின் கிழக்கே 484 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்..! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 484 கிலோ மீற்றர் தொலைவிலும், முல்லைத்தீவிற்கு கிழக்கே 380 கிலோ மீற்றர் தொலைவிலும் நிறைகொண்டுள்ளது. 

இது எதிர்வரும் 24.11.2020 அல்லது 25.11.2020 அன்று தமிழ்நாட்டின் கடலூர் அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இத் தீவிர தாழமுக்கம் தமிழ்நாட்டிலேயே கரையைக் கடக்கும் என்பதனால் எமக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனினும் இத்தீவிர தாழமுக்கம் வடமேற்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் குறிப்பாக முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு 

மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரங்கள் இத்தாழமுக்கத்தின் உள் மற்றும் வெளிவலயங்களுக்குள் வருகின்றமையால் இப்பகுதிகளில் கன மழையுடன் பலத்த காற்றும் வீசக் கூடும். 

இன்றுமுதல் (23.11.2020) மழை தொடங்கினாலும் குறிப்பாக 24.11.2020 ,25.11.2020 மற்றும் 25.11.2020 அன்றும் செறிவான மழை கிடைப்பதுடன் காற்றின் வேகமும் மணிக்கு 60 கீ.மீ. இனை விட 

வேகமாக வீசும் என எதிர்பார்க்கலாம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு