சிவப்பு எச்சரிக்கை மக்களே அவதானம்..! யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாள் சிவப்பு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் புயலாக மாறியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. 

“நிவாட்” என ஈரான் நாட்டினால் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் இன்று இரவு புல்மோட்டைக்கு எதிரே தரை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 24ம், 25ம் திகதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் 

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த நாட்களில் வடகிழக்கு மாகாணங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றராக இருக்கும் எனவும் சுமார் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் எனவும்

பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு