மரண சடங்கிற்காக கொழும்பிலிருந்து வந்தவரால் 43 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்..! நோயாளி வவுனியா - யாழ்ப்பாணம் தனியார் பேருந்தில் பயணம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - திருவையாற்றில் மரண வீட்டிற்கு கொழும்பிலிருந்த வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சுமார் 43 குடும்பங்களை சேர்ந்ந்த 169 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண வீட்டில் கலந்துகொண்டவர்களை தேடும் பணியை சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இருந்து திருவையாறு மரண நிகழ்விற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மரண வீட்டிற்கு சென்ற அயலவர்கள், உறவினர்கனின் வீடு என இதுவரை பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நேற்று இறுதிக் கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டபோது 7 பேர் மட்டுமே சடலத்தை எடுத்துச் செல்ல சுகாதாரத் தரப்பினர் அனுமதி வழங்கினர்.

இறுதி நிகழ்விற்கு முன்னர் கொழும்பில் இருந்து வந்தவருடன் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேநேரம் கொழும்பில் இருந்து வருகை தந்தவர் கொழும்பில் இருந்து வவுனியா வந்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் கிளிநொச்சி வரை பயணித்து இரணைமடுச் சந்தியில் இறங்கி 

அங்கிருந்து நீல நிற முச்சக்கர வண்டியில் வீடு நோக்கிப் பயணித்துள்ளார். இதனால் நீல நிற முச்சக்கர வண்டி தேடப்படுவதோடு யாழ்ப்பாணம் தனியார் பேரூந்து அடையாளம் கானப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு