கிளிநொச்சியில் 2 பேருக்கும், வவுனியாவில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் 266 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வவுனியா விமானப்படை முகாமை சேர்ந்த 8 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றய தினம் திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கிற்காக கொழும்வு ஆட்டுப்பட்டி தெருவிலிருந்து வந்த உயிரிழந்தவரின் மகளுக்கும், கண்டாவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வந்திருந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக

பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளதுடன், கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

Radio