SuperTopAds

சுமந்திரன், கஜேந்திரகுமார், சிறீதரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் 24ம் திகதிவரை ஒத்திவைப்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல்களை நடாத்த தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் மீதான நீதிமன்ற கட்டளைக்காக 24ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தனித்தனியாக யாழ்.பல்கலைக்கழகம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் நினைவேந்தல்களில் ஈடுபடவுள்ள 

38 பேருக்கு எதிராகத் தடைவிதிக்கக்கோரி குறித்த விண்ணப்பத்தைச் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், 

சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், க.சுகாஷ், யாழ். மாநகர சபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராகத் தடை விதிக்கக்கோரியே இந்த விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று பிற்பகல் 5 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், க.சுகாஷ் ஆகியோர் ஆஜராகினர்.

இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், கட்டளை பிறப்பிப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல்களை நடத்த தடைவிதிக்கக்கோரி 

அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸார் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று பிற்பகலில் இடம்பெற்றபோது, 

எதிர்மனுதாரர்கள், நாங்கள் சட்டத்தை மீறப்போவதில்லை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றத்தையும் செய்யமாட்டோம். 

தாவது கூட்டம் கூடுவதாக இருந்தால் சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் செய்வோம் என உறுதிமொழி வழங்கியதையடுத்து பொலிஸார் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.