ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள்!! -பலருக்கு முன்னுதாரமான அருண் விஜய்-

ஆசிரியர் - Editor III
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள்!! -பலருக்கு முன்னுதாரமான அருண் விஜய்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் பலருக்கு எடுத்துக்காட்டாக தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்.

தற்போது தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய புகைப்படங்களை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.

“இவர்களின் புன்னகையைப் பார்ப்பது மற்றும் இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அனைவருக்கும் நன்றி … எப்போதும் போல் தாழ்மையுடன்” என்று தெரிவித்துள்ளார்.


Radio