திடீரென கறுப்பு நியமாக மாறிய கிணற்று நீர்..! ஆய்வுகள் ஆரம்பம், வேடிக்கை பார்ப்பதற்கு கூடும் மக்கள், புதுக்குடியிருப்பு - வேணாவிலில்..
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் உள்ள கிணற்றில் நீர் திடீரென கறுப்பு நிறமாற மாறிய நிலையில் மக்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்துள்ளனர்.
இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.
குறித்த கிணறு அழமைந்துள்ள பகுதியை சூழவுள்ள நிலப்பகுதியில் ஏதேனும் இரசாயனக்கழிவுகள் அல்லது ஏதேனும் வேறு கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலந்திருக்கலாம் எனவும்,
சூழவுள்ள ஒரு கிலோமீற்றர் பகுதிக்குட்பட்ட நிலத்தினுடைய மேற்பரப்பிலிருந்து கழிவுகள் ஊடு வடிந்திருக்கலாம், எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, கழிவுநீர் கசிதல், கழிப்பிடங்கள், ஊறித்தோயும் குழிகள் முதலியவற்றிலிருந்து ஏற்படும் நிலத்தடிகசிவினால் கிணற்று நீர் மாசு அடையலாம்.