தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்..! நீதி பேராணை மனுக்கள் விசாரணைக்கு யாழ்.மேல் நீதிமன்றில்.. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்..

ஆசிரியர் - Editor I

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை தடைசெய்யவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தகூடாது. என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு கட்டளை வழங்ககோரும் நீதி பேராணை மனுக்கள் மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். மற்றும் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுமந்திரன் மணிவண்ணன்,

சயந்தன் ஆகியோர் யாழ்.நீதி மன்றில் ஆஜராகியுள்ளனர்.போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கான அறிவித்தல் எதிர் மனுதார்களுக்கு மனுதாரர்களின் சட்டத்தரணியினால் பதிவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என்று எதிர்மனுதார்களான வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் 

அவர்களின் பணியாற்றுபவர்களுக்கும் தலையீட்டு எழுத்தாணைக் கட்டளை வழங்குமாறு மனுதாரர்கள் கோரவுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு