இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -சடுதியாக உயரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை-

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! -சடுதியாக உயரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அங்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது, இருப்பினும் தற்போது கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,162 ஆக உயர்ந்துள்ளது. 

Radio