கவர்ச்சி நாயகிக்கு கொடுக்கப்பட்ட பரிசு!! -மகிழ்ச்சியில் சனம் ஷெட்டி-

ஆசிரியர் - Editor III
கவர்ச்சி நாயகிக்கு கொடுக்கப்பட்ட பரிசு!! -மகிழ்ச்சியில் சனம் ஷெட்டி-

தமிழ் சினிமாத்துறையில் கவரச்சி நடிகையாக வலம்வரும் சனம் ஷெட்டியின் பிறந்த நாளை அவர் நடித்துள்ள ‘எதிர்வினையாற்று’ படக்குழுவினர் கொண்டாடினார்கள். அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது. படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள், அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். அலெக்ஸ் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார். ‘எதிர்வினையாற்று’ படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு போட்டோகிராபர், ஒரு நள்ளிரவு பயணத்தில் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அதனால் அவனை பயங்கர விளைவுகள் பின்தொடர்கின்றன. அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே படத்தின் கதை. இதில் போட்டோகிராபராக அலெக்ஸ், அவரால் காப்பாற்றப்படும் பெண்ணாக சனம் ஷெட்டி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

பொலிஸ் உதவி அத்தியட்சகர் ஆர்.கே.சுரேஷ், கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன், இன்னொரு நாயகியாக லட்சுமி பிரியா, வில்லனாக சம்பத்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்”.


Radio