அந்த மீசையை நாங்க மீண்டும் பாக்கணும்!! -தவசியை நேரில் சந்தித்து உதவிய ரோபோ சங்கர்-

ஆசிரியர் - Editor III

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தவசியை, நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து உதவி செய்து இருக்கிறார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி தன்னுடைய மருத்துவ செலவிற்கு உதவி புரியுமாறு கோரிக்கை வைத்து இருந்த நிலையில், நடிகர் ரோபோ ஷங்கர் இன்று புதன்கிழமை மதுரைக்குச் சென்று நடிகர் தவசியை நேரில் சந்தித்து பேசினார். மேலும் அவரது கவலையைப் போக்கும் வகையில் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவிற்கு உதவித்தொகையும் செய்திருக்கிறார்.  

புற்றுநோயின் தாக்கத்தால் உருக்குலைந்து போயிருந்த நடிகர் தவசிக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அந்த மீசையை நாங்க பார்க்கணும்  என்று  ரோபோ சங்கர் பேசியதும் நான் மீண்டு வருவேன் என்று தவசி பேசிய வீடியோவும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Radio