அபார ஞாபக சக்திபடைத்த 2 வயது சிறுவன்!! -சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்தார்-

ஆசிரியர் - Editor III

தனக்கு உள்ள அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த 2 வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தான்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜீவன்மாணிக்கம் திவ்யா தம்பதியினரின் 2 வயது மகனான ஆதித்யா, அபார ஞாபக சக்தி உடையவன் என்பதை அவருடைய பெற்றோர் அறிந்தனர். 

இதனையடுத்து தேசிய கொடிகளின் மூலம் நாடுகளின் பெயர்களை கூறுதல், இந்திய நாட்டின் தற்போதைய மத்திய மந்திரிகளின் பெயர்கள், உலக நாடுகளின் பிரசித்தி பெற்ற விமானங்களின் பெயர்கள், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களின் பெயர்கள், ‘லோகோ’ மூலம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை கூறுதல் தொடர்பாக அவனுக்கு பெற்றோர் பயிற்சி அளித்தனர்.

பெற்றோர் கொடுத்த பயிற்சியை அப்படியே உள்வாங்கி கொண்ட சிறுவன் ரினேஷ் ஆதித்யா, தான் கற்றதை அபாரமாக வெளிப்படுத்தி அசத்தி வருகிறான். தேசிய கொடியை காட்டினால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் காட்டி வியக்க வைக்கிறான். மேலும் பல நிறுவனங்களின் லோகோவை சரியாக கூறி வருகிறான்.

சிறுவனின் அசாத்திய தனித்திறமை காரணமாக, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் அவன் இடம் பெற்றுள்ளான். மேலும் கலாம் விஷன் இந்தியா-2020 சான்றிதழ்களை பெற்றுள்ளான். 


Radio