பிரவு தேவாக்கு ரகசியமாக 2 ஆவது திருமணம்!! -பொண்ணு யார் தெரியுமா-

ஆசிரியர் - Editor III

நடனபுயல் என்று வர்ணிக்கப்படுபவரும், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா, ரகசியமாக 2 ஆவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டதை அடுது்து நயன்தாராவை திருமணம் செய்ய முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. தற்போது பிரபுதேவாவுக்கு 47 வயது ஆகிறது. 

குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர் உறவுக்கார பெண்ணை 2 ஆவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு