சசிகலாவின் விடுதலை எந்த ஆணியும் புடுங்காது!! -அச்சமில்லை என்கிறார் எடப்பாடி-
சசிகலாவின் விடுதலை செய்யப்பட்டால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை கோவையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதனால் அவரின் விடுதலை பேசி பயனில்லை என்றார்.
மேலும், ‘‘7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’’ என்றார்.