SuperTopAds

புற்று நோயால் அவதிப்படும் நடிகர் தவசி!! -சிகிச்சைக்கு உதவ உருக்கமான கோரிக்கை-

ஆசிரியர் - Editor III
புற்று நோயால் அவதிப்படும் நடிகர் தவசி!! -சிகிச்சைக்கு உதவ உருக்கமான கோரிக்கை-

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்களில் பெரிய மீசையுடன் நடித்து வந்த நடிகர் தவசி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு தேவையான உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

நடிகர் தவசி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக கலகலப்பூட்டியவர் .

தற்போது மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ சரவணனின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரை உலகினர், தொழில் நுட்பகலைஞர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.