மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஏற்பாடா..? புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கிறார்களா? ஊடகவியலாளர்கள் கேள்விக்கு இராணுவ தளபதி காட்டம்..
மாவீரர் நாள் நினைவேந்தல் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். அதனை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்காக தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா பரவலை தடுப்பதற்கு நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பொதுவெளியில் யாரேனும் செயற்பட்டால்
அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படும். மரணித்த சாதாரண மக்களை நினைவுகூறுவதற்கான உரிமை அவர்களது உறவினர்களுக்கு உண்டு. ஆனால் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும்,
அவ் அமைப்பிற்கு பரப்புரை செய்யும் நோக்குடனும் பொது வெளியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.