வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

டுபாய் நாட்டிலிருந்து திரும்பிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெறும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 118 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது டுபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்மணி ஒருவர் 

தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் எவருக்கும் தொற்று இல்லை. இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் 

ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு