SuperTopAds

காதல் திருமணம் தான்!! -37 வயதில் திரிஷாவின் ஆசை-

ஆசிரியர் - Editor III
காதல் திருமணம் தான்!! -37 வயதில் திரிஷாவின் ஆசை-

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷாவுக்கு இப்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது. பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருப்பினும் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணம் தொடர்பில் திரிஷா கூறியதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். 

அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன் என்றார்.