வாளுடன் சுற்றி திரிந்து சண்டித்தனம், விதவை பெண்களுடன் சேஷ்ட்டை..! ரவுடியை பிடித்து அடித்து முறித்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேராவில் பகுதியில் வாளுடன் திரிந்து சண்டித்தனம் செய்வதுடன், விதவை பெண்களை அச்சுறுத்தும் ரவுடி கும்பலை மடக்கிய மக்கள், ரவுடி ஒருவனை பிடித்து அடித்து முறித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சனி, ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவை பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வெட்டு குழு, வீட்டிற்கு வரவா இல்லை உன் மகளை கடத்துவோம்
அல்லது மகளுக்கு கை எடுப்போம் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு பொலிசாருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள்
அதில் ஒருவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து அடித்து முறித்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.